முல்லைப்பூ செடியை வளர்க்க....
முல்லைப்பூ செடியை வளர்க்க, சரியான மண்ணைத் தேர்வுசெய்து, செடிக்குத் தேவையான நீர் மற்றும் உரங்களை அளித்து, பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். மேலும், செடியின் வளர்ச்சிக்கு ஏற்ப அதனை வெட்டி விடுவதும் (trimming), சரியான வெளிச்சம் கிடைப்பதும் அவசியம்.
வளமான மண் மற்றும் மணல் கலந்த மண்ணைப் பயன்படுத்துவது நல்லது.
முதலில் செம்மண் அல்லது உங்கள் வீட்டு பகுதிகளில் கிடைக்க கூடிய மண் வகைகளில் எதாவதுஒன்றைஎடுத்துகொள்ளுங்கள். அதனுடன் மாட்டு எருது அல்லது ஆட்டு எருது, மக்கிய தேங்காய் நார், இலை தழைகள் போன்றவற்றைகலந்துகொள்ளுங்கள்.
இதனை உங்கள் செடிக்கு மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் கொடுங்கள்.
செடி நடும் போது, சரியான இடைவெளியுடன் நடுவது முக்கியம். செடிகளுக்கு இடையே சுமார் 8 அடி இடைவெளி விட வேண்டும்.
முல்லை செடிக்கு தினமும் தண்ணீர் கொடுக்க வேண்டும். இது சூரிய ஒளியில் தான் நன்றாக வளரும் எனவே அதற்கேற்ப தண்ணீரும் முல்லை செடிக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து சீரான இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும்.. முல்லை செடியில்உள்ள கிளையை வளர வளர வெட்டி விட வேண்டும். கிளைகளைவெட்டாமல்அப்படியேவிட்டுவிட்டால்செடிமட்டும்தான்காடுபோல்வளரும். அதில்செடிகள்பூக்கும்தன்மைகுறைந்துவிடும்.நீங்கள்செடியின்கிளைகளைவெட்டிவிட்டால்தான்கிளைகள்இரண்டாகபிரிந்துஅதிகமொட்டுகள்வைக்கதொடங்கும்.
செடிகளை குறிப்பிட்ட அளவு உயரத்தில் வெட்டிவிட வேண்டும்.
வீட்டில் இருக்கும் காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்திய பிறகு மீதமுள்ள கழிவுகளை முல்லை செடிக்கு கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதன் மூலம் உங்கள் முல்லை செடி வேகமாக மொட்டுகள் வைக்க தொடங்கும்.
அதுமட்டுமில்லாமல் வாழைப்பழ தோலில் அதிக அளவு பொட்டாசியம் சத்து நிறைந்து இருக்கிறது. எனவே வாழைப்பழ தோலை அரைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முல்லை செடிக்கு கொடுக்கலாம்.
இதனை நீங்கள், வாரத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை முல்லை செடிக்கு கொடுக்கலாம்.
சாம்பலுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து விட்டு மாதத்திற்கு ஒருமுறை சாம்பல் கரைசலை முல்லை செடிக்கு கொடுக்கலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த முறைகளை எல்லாம் முல்லை செடிக்கு கொடுத்து வந்தீர்கள் என்றால் நீங்கள் எதிர் பார்க்காத அளவிற்கு முல்லை செடியில் பூக்கள் பூத்து குலுங்கும்.
காட்டுமல்லி, வனமல்லி, ஊசிமல்லி, பிடவம், மஞ்சள் முல்லை, வெள்ளை முல்லை, ஜாதி முல்லை, சந்தன முல்லை என்ற வகைகள் இருக்கிறது.
- மாலை 6 மணி முதல் முதல் மெதுவாக மொட்டு விரிவடைந்து பூ மலரும்.
- இரவு 8 மணி முதல் 12 மணி வரை பூ முழுவதுமாக மலரும்.
- காலை 4 மணி முதல் 6 மணி வரை மலர்ந்த பூக்கள் அதிகளவில் மணம் வீசும்.
. காலை 7 மணிக்கு பிறகு பூக்கள் மெதுவாக வாடத் தொடங்கும்.
0
Leave a Reply